சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் வீரராக அவதாரம் எடுத்த தாகூர், தற்பொழுது இந்திய அணியிலும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளில் ஹர்திக் பாண்டியா இல்லாத குறையை அவர் போக்கி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட்டுகளை கைப்பற்றி ஒரு அரைசதம் அடித்தும் அசத்தினார். பின்னர் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடி மொத்தமாக 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதோடு மட்டுமல்லாமல், […]