Piano, Keyboard, Violin, Flute notes, Guitar Tabs and Sheet Music of the Song Kanne Kalaimane from the 1983 Tamil movie Moondram Pirai in Western and Indian Notations.
Piano, Keyboard, Violin, Flute notes, Guitar Tabs and Sheet Music of the Song Kuzhaloodum Kannanukku from the 1986 Tamil movie Mella Thirandhathu Kadhavu in Western and Indian Notations.
Piano, Keyboard, Violin, Flute notes, Guitar Tabs and Sheet Music of the Song Thendral Vanthu Theendum Pothu from the 1995 Tamil movie Avatharam in Western and Indian Notations.
Piano, Keyboard, Violin, Flute notes, Guitar Tabs and Sheet Music of the Song Background Theme (BGM) from the 1986 Tamil movie Mouna Ragam in Western and Indian Notations.
எழுபதுகளில் இளையராஜா பாடல் 13- 'உறவுகள் தொடர்கதை' Gangai Amaran with Ilayaraja 1978ல் வெளியான 'அவள் அப்படித்தான்' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற சுகமான பாடல் இது. முதலில் பாடலைக்கேட்போம். பாடலின் சூழல்: தன்னுடைய முந்தைய உறவில் விரிசலோ முற்றுப்புள்ளியோ விழுந்த சோக சமயத்தில் நாயகி இருக்கும் போது, நான் இருக்கிறேன் உனக்கு, நாம் புதிய உறவில் இணைவோம் என்று ஆறுதல் கூறி நாயகன் பாடும் பாடல் இது. இசைக்கோர்வை: எளிய இசையில் சுகமான ராகத்தில் அமைந்த இந்தப்பாடல் இளையராஜாவின் மெலடி பாடல்களில் குறிப்பிடத் தகுந்த ஒன்று என்று சொல்லலாம். பியானோவும், கிட்டார் பிளக்கிங்கும் (Plucking) பின்னிப்பிணைந்து, இணைந்தும், இணையாமலும், ஒலிக்க, "உறவுகள் தொடர்கதை", என்று காந்தர்வக்குரல் காதுகளை வருடுகிறது. குரலுக்கு சேதாரம் விளைவிக்கக் கூடாது என்ற ஜாக்கிரதை உணர்ச்சியில், மெலிதாக பின்னணி இசையும், இசைக்கு சேதாரம் விளைவிக்கக் கூடாது என்று மென்குரலும் இணைந்து மெல்லிசை படைத்துள்ளனர். பியானோ, கிடார், பேஸ் புல்லாங்க்குழல் ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குரல்: கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் குரல் மெல்லிய தாலாட்டுப்போல ஒலித்து புண்பட்ட நாயகியின் மனதுக்கு மருந்திடுவது போல ஒரு சூதிங் (Soothing) எஃபக்ட் கொடுக்கிறது. இந்தப்பாடலில் ஜேசுதாஸ் எந்த உச்சரிப்புப் பிழையும் இன்றி பாடுவது இன்னொரு சிறப்பம்சம். 70களின் காலகட்டத்தில் ஜேசுதாஸின் குரல் இன்னும் இனிமையாகவே ஒலிக்கிறது. பாடல் வரிகள்: உறவுகள் தொடர்கதை... உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம் முடிவிலும் ஒன்று தொடரலாம் இனியெல்லாம் சுகமே... உன் நெஞ்சிலே பாரம்.. உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன் உன் கண்களின் ஓரம்.. எதற்காகவோ ஈரம் கண்ணீரை நான் மாற்றுவேன் வேதனை தீரலாம்... வெறும்பனி விலகலாம் வெண்மேகமே புது அழகிலே நானும் இணையலாம் வாழ்வென்பதோ கீதம்.. வளர்கின்றதோ நாணம்.. நாள் ஒன்றிலும் ஆனந்தம் நீ கண்டதோ துன்பம் இனி வாழ்வெல்லாம் இன்பம் சுக ராகமே ஆரம்பம் நதியிலே புது புனல்.. கடலிலே கலந்தது நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது வரிகளை எழுதியவர் கங்கை அமரன். எளிய வரிகளாய் இருந்தாலும் சந்தம் நன்றாகவே அமைந்துள்ளது. எதுகை, மோனையும் சிறப்பாகவே இருந்து நல்ல கவித்துவமும் இருக்கிறது. அதோடு பாடலின் சூழலையும் கதையையும் நன்றாகவே விளக்கும் படியான சிட்டுவேஷன் பாடல் என்றும் சொல்லலாம். குறிப்பாக பல்லவியைச் சொல்லலாம் அதன்பின் 2-ஆவது சரணத்தைவிட முதல் சரணம் நன்றாக அமைந்திருக்கிறது. "உறவுகள் தான் தொடர்கதை போன்றது, ஆனால் உணர்வுகள் சீக்கிரம் முடிந்துவிடும் சிறுகதை போன்றது. ஆனால் ஒரு கதை முடிந்தாலும் அடுத்த கதை தொடரும் எனவே இனிமேல் இன்பம் தான்" என்று சொல்கிறது பல்லவி. "உன் நெஞ்சில் பாரம் இருந்தாலும், உனக்காக இருக்கும் நான் அதனை சுமைதாங்கியாய் தாங்குவேன், உன் கண்களின் ஓரத்தில் ஈரம் எதற்கு, உன் கண்ணீரை நான் மாற்றுவேன்", என்று தைரியம் கொடுக்கிறது முதல் சரணம். சும்மா சொல்லக்கூடாது நன்றாகவே எழுதியிருக்கிறார் கங்க்கை அமரன் நிறைய குத்துப்பாடல்கள் எழுதியிருந்தாலும் இது போன்ற சில நல்ல பாடல்களை எழுதியிருக்கிறார். ஞாபகத்துக்கு வரும் இன்னொரு சிறந்த பாடல் ஜானி என்ற திரைப்படத்தில் வரும் "காற்றில் எந்தன் கீதம்" என்ற பாடல். அதில் ஒரு வரி எழுதியிருப்பார். "நில் என்று சொன்னால் மனம் நின்றா போகும்" என்று. இசைக்கருவி-வாசிப்பவர் (கிடார்), பாடகர், பாடலாசிரியர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குநர், இசைக்குழுத்தலைவர், டெலிவிஷன் ஆன்க்கர் என்ற பலமுகங்கள் பல திறமைகள் இருந்தாலும் அவர் 'இளையராஜாவின் தம்பி' என்று மட்டுமே அறியப்பட்டார். அதன்பின்னர் இப்போது இயக்குநர் "வெங்கட் பிரபு"வின் தந்தை என்று அறியப்படுகிறார். ஏனென்றால் பல திறமைகள் இருந்தாலும் ஒரு ஃபோகஸ் இல்லாமல் போனதால் தன் தனித்துவத்தை அவரால் உருவாக்க முடியவில்லை. இளையராஜா என்ற மிகப்பெரிய ஆளுமையின் நிழலில் அதிகம் தங்கியதால் ஒருவேளை அப்படி ஆகியிருக்கலாம். இளையராஜாவுக்கு பல திறமைகள் இருந்தாலும், அவருடைய ஒரே நோக்கம் இசையமைப்பது மட்டுமே என்பதால் அவர் பெரிதாக பேசப்படுகிறார். இதுபோல பல்திறமைகள் இருந்த சிலர், தனிமுத்திரை பதிக்க முடியாமல் போனதை நான் பார்த்திருக்கிறேன். இதற்கு யாரைக் குற்றம் சொல்லமுடியும்? Jack of all trade, Master of None என்று இருப்பதைவிட ஸ்பெஷலிஸ்ட் என்று இருப்பதுதான் நலம் என்று இதனால் விளங்கிக் கொள்ளலாம். பாடலின் ராகம்: இதே மெட்டை ஒட்டி இளையராஜா பல பாடல்களை இசையமைத்திருக்கிறார். அவற்றில் நாம் முன்னரே பார்த்த "தேவன் திருச்சபை மலர்களே" ஒன்று. பன்னீர் புஷ்பங்கள் படத்தில் வரும் "கோடைக்காலக் காற்றே" என்பது இன்னுமொன்று. அடுத்த வாரம் இன்னொரு பாடலில் சந்திக்கிறேன்,.வருகைக்கு நன்றி .
Carnatic(1/365), then Western(2/365), but this is an idyllic, rustic, melodic composition. There is something very special in this sequence that I am bowled over, from the time of its release in th…
Piano, Keyboard, Violin, Flute notes, Guitar Tabs and Sheet Music of the Song Gumm Summ Gumm from the 2009 Hindi movie Paa in Western and Indian Notations.